இலங்கை நடிகர் சரித் அபேசிங்க 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சரித் அபேசிங்க, தான் சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
“அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகர் என்று நினைக்க வேண்டாம். என்னுடைய வேலையைப் பார்த்தால் நான் எப்போதும் அரசியலைப் பற்றித்தான் பேசுவேன். திரையுலகில் மட்டுமே இருந்த எனது அரசியல் செயல்பாடுகள் தற்போது உண்மையான அரசியல் களத்தை எட்டியுள்ளது" என்றார்.
கொழும்பு மாவட்டத்தின் 15 தொகுதிகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டத்தை 23 நாட்களுக்குள் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக சரித் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க தாம் நம்புவதாகவும், அதற்கு இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.