அருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட எச்சரிக்கை தகவலை இலங்கை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட கூடும் எனவும் அதனால் அமெரிக்க பிரஜைகளையும் ராஜதந்திரிகளையும் அப்பகுதிக்கு விஜயம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போலீஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ புலனாய்வு பிரிவினருக்கு இவ்வாறான தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அருகம்பே பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்ததாகவும் எனினும் பாதுகாப்பு முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.