தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாளர்கள் குழுவினால் தேசிய மக்கள் சகதிக்கு ஆதரவான ஹட்டன் பொகவந்தலாவ பிரதேச ஆதரவாளர்கள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொகவந்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் கூட்டம் பொகவந்தலாவ சிறிபுர பிரதேசத்தில் உள்ள தனியார் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றபோது திசைகாட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தோட்டப்பகுதிக்கு வந்தால் வெட்டி கொல்வோம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.