web log free
December 07, 2023

பதில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதில் அமைச்சர்களாக மூன்று பேர் இன்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசீம் ஆகியோர் வகித்த அமைச்சு பதவிகளுக்கே அவர்கள் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லக்கி ஜயவர்தன,  புத்திக பத்திரண, அனோமா கமகே ஆகியோரே இன்றைய தினம் பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகர திட்டமிடல், நீர்வழங்கல், உயர்கல்வி பதில் அமைச்சராக நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறை வர்த்தக அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பதில் அமைச்சராக தொழில்துறை பிரதியமைச்சர் புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பதில் அமைச்சராக பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே  பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

 

 

Last modified on Monday, 09 September 2019 02:24