நீர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட, 'சாலி' என்ற பெயருடைய நாயை, மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
பெரியமுல்லையை வசிப்பிடமாக கொண்ட அசங்க சம்பத் (வயது 37) என்பவரே இவ்வாறு பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
சாலி எனப்படும் லெப்ரடோ வகையைச் சேர்ந்த குறித்த நாயை இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர், பெரியமுல்ல பிரதேசத்தில் வைத்து கடந்த 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
அவரை, நீர்கொழும்பு பதில் நீPதவான் ஸ்வர்ணா காந்தி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலைச் செய்யுமாறு நீதவான் கட்டளையிட்டார்.