web log free
December 07, 2023

இலங்கை மீனவர்கள் 30 பேர் விடுதலை

இந்திய கடற்படையால், கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் குறித்த இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.