web log free
April 21, 2025

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா பெரியபுளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த எதிரிகளுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் எம்பிக்க தவறியமையால் சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd