2024 பொதுத் தேர்தலின் முதல் பெறுபேறுகளை இரவு 10 மணிக்குள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாலை 5 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, வாக்குப் பெட்டிகள் அனைத்தும் கிடைத்தவுடன் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
இந்த வருட பொதுத் தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதுடன், 8888 வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் 2034 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், எண்பதாயிரம் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.