web log free
December 02, 2023

'ஊழல் இல்லாத இடமே இல்லை'

இலங்கையில் ஊழல் இல்லாத இடமே இல்லையென பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சட்டதிட்டங்களை மீறுவதற்கு பழகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் உலகில் ஒழுக்கம் இல்லாமை காரணமாக சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை பூமி இரத்தத்தால் தோய்ந்த பூமியாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.