web log free
December 06, 2024

தமிழரசுக் கட்சி பா.உறுப்பினர்களுக்கும், இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர் ஸ்தானிகருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில்  அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டுமெ னவும்  மாகாண சபைத் தேர்தல் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பின் இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd