இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா குறிப்பிடுகிறார்.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
நெல் உற்பத்தி போதுமானது ஆனால் அது அரிசியாக சந்தைக்கு வராத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
சந்தைக்கு வராத அரிசியை பாரிய ஆலைகளின் உரிமையாளர்கள் தவிர வேறு எங்கும் வைத்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திடம் நிரந்தரமான பதில்கள் இல்லை எனவும், தற்போதைய தேவைக்கேற்ப பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனது அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.