web log free
December 05, 2023

சக்வித்தி ரணசிங்கவிற்கு பிணை

சுமார் 9 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ஹவுசிங் அன்ட் கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்தின் தலைவர் சந்தன வீரகுமார எனும் சக்வித்தி ரணசிங்க வை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான முறையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி சென்றமை மற்றும் மக்களிடம் இருந்து 162 கோடி ரூபாய் பணத்தை வைப்பு செய்து தவறான முறையில் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் 5 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் சரீர பிணைகள் இரண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு வழக்கில் 1 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுதியான சரீர பிணைகள் இரண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.