2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழமை போன்று வாகனங்களை இறக்குமதி செய்யவும், பெப்ரவரி மாதம் முதல் அத்தியாவசிய வாகனங்களை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்று வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த நிறுவனம் சுமார் 1,700 வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை முன்பணமாக பெற்றுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.