நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாம் தாக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட சுயேட்சை உறுப்பினர் அர்ஜுன இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு நேரத்தை ஒதுக்குவதற்காக அங்கு சென்ற போதே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்த சுஜித் சஞ்சய் பெரேரா தம்மைத் தாக்கியதாகவும், ஆனால் அவர் தனது தந்தையின் வயதுடையவர் என்பதாலேயே மீண்டும் தாக்கவில்லை எனவும் அர்ஜுன ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதுடன், சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்திருந்த எம்.பி. தெரிவித்தார்.