web log free
March 15, 2026

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அசாத் சாலி இன்று முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று (11) முன்னிலையாகவுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி டி.ஐ.ஜி.சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd