மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது 62 வயதாகும் ஒரு மருத்துவரின் ஓய்வு வயது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.