இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், சுற்றுலா வகை வாகனங்களுக்கான டொயோட்டா லங்கா வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நான்கு மாத காலப்பகுதிக்குள் பஸ்கள் மற்றும் வேன்கள் இலங்கைக்கு வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேலும் பல வாகனங்களை இறக்குமதி செய்ய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர், டொயோட்டா லங்கா நிறுவனம், புத்தம் புதிய டொயோட்டா வான் ஒன்றை 150 இலட்சத்திற்கும், புத்தம் புதிய டொயோட்டா பஸ்ஸை 170 இலட்சத்திற்கும் விற்பனை செய்யவுள்ளதாக, முன் அறிவிப்புகளில் தெரிவித்திருந்தது.
இந்த வகை வேன்கள் ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பின்னணியில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையும் சிறப்பு.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான வாகன இறக்குமதி சுமார் நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் இந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் அசாதாரணமாக உயர்த்தப்பட்டுள்ளன.