web log free
May 23, 2026

வெளிநாடுகளில் இருந்து பரீட்சை எழுத வாய்ப்பு

கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகளும் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.

இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிமுறைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்தப் பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையத்தளம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd