அரச சேவையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால் அரச சேவையை பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் செலவில் சிக்கல் இருப்பதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி 'நில மேதுர' கட்டிடத்தில் உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) மாவட்ட செயலாளர்/அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அரச சேவையை ஒரே உறுதியுடன் கூடிய முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தின் முகவர் பதவியிலிருந்து மாவட்டச் செயலர் என பட்டங்களை மாற்றிய சேவை சுமார் 200 வருடங்கள் பழமையானது என்றும், நாட்டைப் புதிய பாதையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது என்றும், தற்போதைய நிலையில் திருப்தி அடைய முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.