பாதியில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் 5 வீடுகளை கொள்வனவு செய்துள்ள வர்த்தகர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) தலைவராக இருந்த அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வித்யாலங்காரவுக்கு எதிராகவே அது இடம்பெற்றது.
ரவி வித்யாலங்கார தன்னிடம் இருந்து 750 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு பணத்தை மோசடி செய்ததாக இந்த வர்த்தகர் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜானகி, பியூமாலி உள்ளிட்டோரும் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளதாகவும் வர்த்தகர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் இதற்கு முன்னர் 7 வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 15 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.