வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை சில மாதங்களில் இவ்வாறானதொரு நிலைக்கு கொண்டு வர முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிடுகின்றார்.
கடனுதவி திறக்க முடியாமல் துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்த நாடு இன்று நாடாக மூச்சு விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான தனது அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் பத்து நாட்களில் முடிவடைந்ததாகவும், டிசம்பர் 31 க்கு முன்னர் அவற்றை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவ்வாறு செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
சர்வதேச நாணய நிதியக் குழு கூட தமது குழுவின் தலையீட்டை தியாகம் செய்தமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார்.