கல்பிட்டி பத்தலங்குண்டுவ கடற்பரப்பில் 28 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 11 கிலோ 300 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்ற மீன்பிடிக் கப்பலுடன் மூவர் இன்று (4) கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 45 வயதுடைய கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த மூவர்.
சந்தேகநபர்கள் பயணித்த மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இந்த தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் சந்தேகநபர்கள் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.