கல்கிஸ்ஸ செம்பலன்கொடுவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் உறவினர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மவுண்ட்லெவன்யா பொலிஸார் தெரிவித்தனர்.
39 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்போது ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை மவுண்ட்லெவன்யா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.