web log free
February 05, 2025

பஸ் சங்கங்கள் எடுத்துள்ள புதிய முடிவு

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதில்லை என சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொலிஸார் தமது அதிகாரத்தை மீறுவதாகவும், பஸ்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கருதுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பஸ் சங்கங்கள் ஆரம்பத்தில் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானித்திருந்தன.

இந்நிலையில், பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் சந்தித்தனர்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதில்லை என பஸ் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd