web log free
March 07, 2026

துமிந்த மீண்டும் வைத்தியசாலையில்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துமிந்த சில்வா நேற்று முன்தினம் (10) இரவு சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பல மாதங்களாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்த துமிந்த சில்வாவை, மருத்துவக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, நேற்று காலை சிறைச்சாலையின் பொதுப் பிரிவுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd