30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தின்போது, இலங்கை ஆட்சியாளர்கள் தமது இயலாமையை யுத்தத்தை காட்டி மறைத்துக்கொண்டதாக, மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டை காட்டிக்கொடுக்கும் நாட்டை விற்பனை செய்யும் ஒப்பந்தம் வேண்டாம் என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குண்டுதாக்குதல் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷவினர் அதிகளவில் நன்மையடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.