web log free
May 23, 2026

ஹிஸ்புல்லா இன்று தெரிவுக்குழுவில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இலங்ககோன் ஆகியோர் விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd