web log free
December 02, 2023

மாணவி மீது கத்திக்குத்து - இளைஞன் கைது

களனி பல்கலைக்கழத்துக்கு அருகில் இன்று (13) வியாழக்கிழமை காலை கத்திக்குத்து தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கத்திக்குத்துக்கு இலக்காகிய பல்கலைக்கழக மாணவியொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.