web log free
April 05, 2025

சகலருக்கும் சாதகமான வகையிலேயே தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

அரசியலமைப்பு  வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த  பின்னரே தேர்தலுக்கான  திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து வினவுகையிலே,  மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைகளில் அவதானம் செலுத்தியுள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே தீர்மானம் எடுப்போம்.

வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம்,கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் பண்டிகைக் கால விடுமுறைகள் பற்றி எதிர்க் கட்சிகள் சிலவற்றை   எடுத்துரைத்துள்ளன.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரல் மற்றும் திகதி என்பவை பற்றி    ஆளும் தரப்பினரும்  தமது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், தேர்தல் திகதி குறித்து திணைக்களம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை.சகலருக்கும்  சாதகமான வகையிலேயே  தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd