வரலாற்றில் சுகாதாரத்திற்கான அதிகபட்ச ஒதுக்கீடாக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்காக 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுமக்களுக்கு மருந்துகளின் விலையைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
மருந்துகளின் விலையைக் குறைக்க விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் செலவின விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.