ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் இன்று (11) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற உண்மைகளை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தண்டனை விதிக்காததற்கான காரணங்களைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது.
தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி வழக்கறிஞருக்கு நீதிபதிகள் குழு அறிவித்தது.