கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விஹாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் கட்டப்பட்டு வரும் வீடு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இது நடந்தது.
குறித்த வீடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக கட்டப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.