இன்று கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் தலைவர் கோபவக தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கிரிவெஹேரவில் சோரத தேரரால் மஹிந்த ராஜபக்ஷவுக்காக நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் வீடு தொடர்பிலான விசாரணைக்கு விஹாராதிபதி தேரர் அழைக்கப்பட்டிருந்தார்.
இதே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ருஹுனு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நேற்று (10) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.