web log free
March 24, 2025

வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து வெளியான அறிவிப்பு

விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவு தொடர்பில் தமிழீழ மாவீரர் பணிமனை உத்தியோகப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத் தலைவருக்கு, தலைவரின் வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர், தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாடொன்றிலும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக வீர வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd