web log free
April 08, 2026

ராஜித சேனாரத்னவை பதவி விலக்குமாறு கோரிக்கை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சு பதவியில் இருந்து விலக்குவதுடன், அவரது பிரஜா உரிமையை பறிக்க வேண்டும் என, கண்டி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கண்டி, நீர்கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்றைய தினம் கண்டி போதனா வைத்தியசாலை மற்றும், வவுனியா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd