web log free
February 05, 2026

5 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைப்பு

ஹட்டன் டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 5 சிறுவர்களை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அன்றைய தினம்வரை தடுத்து வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜயராமன் டொர்க்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் மோதலாக மாறிய காணொளி ஹட்டன், சாஞ்சிமலை பிரதான வீதியின் தரவளை பகுதியில் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மோதல் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன், இருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd