web log free
February 05, 2026

வவுணத்தீவு படுகொலையில் சூத்திரதாரி சிக்கினார்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டுள்ள மொஹமட் மில்ஹான் என்ற நபர், வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹாரானுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர் எனக் கருதப்படும் மொஹமட் மில்ஹான், இலங்கையிலிருந்து தப்பித்து டுபாய் சென்றிருப்பதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள மொஹமட் மில்ஹான் என்பவர் வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி பொலிஸஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd