web log free
April 26, 2025

வருகிறது விசுவாவசு வருடம்!

தமிழர் ஆண்டிலேயே பிரபவ எனும் வருடத்தில் தொடங்கி அட்சய எனும் வருடம் வரை 60 வருட கால சுழற்சியில் விசுவாவசு வருடம் என்பது 39 ஆவது வருடமாக திகழ்கிறது.

விசுவாவசு என்றால் நேர்மையான பண்பாளர் , தயாள சிந்தனையாளர் செல்வந்தர் என்று பொருள்.நிகழும் மங்கலகரமான குரோதி வருஷம் நிறைவுற்று இப்புதிய “விசுவாவசு” வருஷமானது பங்குனி மாதம் 30ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு (2025.04.14) 02 .29  மணியளவில் பிறக்கின்றது.

அதாவது, ஆங்கில திகதி 14.04.2025 சரியாக திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு இப் புதிய வருடம் பிறக்கிறது.

இத்தினத்தில் அனைவரும் சங்கற்பித்து மருத்து நீர்தேய்த்து ஸ்நானம் பண்ணி புத்தாடையணிந்து சிவசின்னங்களை தரித்து தீபம், நிறைகுடம் கண்ணாடி, பசு போன்ற மங்கலப் பொருள்களில் முகதரிசனம் செய்து ஆலய வழிபாடாற்றி பெற்றோர் குரு ஆகிய பெரியோர்களின் நல்லாசி பெற்று அறுசுவை உண்டிகளுண்டு இன ஜன பந்துக்களுடன் அளவளாவி மங்கலகரமாக வாழ வாழ்த்துக்கள்.

மருத்துநீர் தேய்க்க புண்ணிய காலம்
விசு புண்ணிய காலமான 2025.04.13ஆம் திகதி இரவு 10. 29  தொடக்கம் மறுநாள் 2025.04.14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.29 வரை மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்யலாம்.

காலுக்கு இலவமிலை, தலைக்கு – ஆலிலை வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் போது நோக்கி நிற்க வேண்டிய திசை: வடக்கு

இவ்வாண்டு ஆடையின் நிறம்: சிவப்பு, நீலம் கலந்தது

உணவு: உணவுடன் சுக்கு, திப்பிலி, அப்பம் சேர்த்துண்ணவும் என சொல்லப்பட்டுள்ளது
இவ்வருட அதிஷ்ட தெய்வம்: சுப்பிரமணியன். (மலை மீது அமைந்துள்ள முருகன்)
அதிஷ்ட தேவதை: வாராஹி
அதிஷ்ட மூலிகை: சுக்கு, திப்பிலி, அதிஷ்ட கல்: புஷ்பராகம்
கார்ய சித்தி மந்திரம்: உத்திஷ்ட கணபதி மந்திரம்
அதிஷ்ட ஹோமம்: கணபதி ஹோமம்
இவ்வருட ஆட்சி சித்தர்: கோரக்கர்

கைவிஷேடம்:
2025.04:14ஆம் திகதி திங்கள் காலை 9.10 – 11.45 மணி வரை…

புத்தாண்டு விஷேட பூஜை செய்யும் நேரம்:
2025.04.14ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு…

சங்கிரம தோஷ நட்ஷத்திரங்கள்:
திருவாதிரை, சித்திரை 3ம்,4ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 4ஆம் பாதம், உத்தரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து வருஷப் பிறப்புக் கருமங்களை முறையாக தெய்வ வழிபாடாற்றி இயன்றளவு தான தருமங்கள் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இடைக்காடரால் பாடப்பட்ட “60 வருட வெண்பா” எனும் பாடலிலே விசுவாவசு வருடத்துக்குரிய பாடல் இது.

“விசுவாவசு வருஷம் வேளாண்மை யேறும் பசு மாடு மாடும் பலிக்குஞ் – சிகநாசம்மற்றையரோ வாழ்வார்கள் மாதங்கண் மீறுமே யுற்றுலகி னல்லமழை யுண்டு”என்பதாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd