அமெரிக்கா இலங்கை மீது விதித்த 44% வரி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால், அந்நாட்டுடம் செய்யப்பட்ட ஓடர்களை இரத்து செய்யும் அபாயம் உள்ளது என்றும், கொள்வனவாளர்கள் குறைந்த வரிகளைக் கொண்ட நாடுகளுக்குச் செல்லக்கூடும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகிறது.
அமெரிக்கா குறைந்த வரிகளை விதித்துள்ள மெக்சிகோ, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை நோக்கி கொள்வனவு திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
44 சதவீத வரி அமுலில் இருந்தால், நாட்டின் ஏற்றுமதி, குறிப்பாக ஆடை மற்றும் றப்பர் ஏற்றுமதி குறையும் என்றும், உற்பத்தி திறன் குறைவதால் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறை மந்தமடையும்.
இது இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இது நாட்டிற்குள் அந்நிய நேரடி முதலீடு குறைவதற்கும் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை இழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
அப்போது அரசாங்கம் சமூகப் பாதுகாப்புக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அரசாங்கத்தின் ஏற்றுமதி வருமானம் குறையும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகிறது.