web log free
June 15, 2026

நாளை (23) நீர் விநியோகம் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள நுகர்வோர் தேவையான தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd