web log free
December 21, 2025

முகக் கவசம் அணிவதே பாதுகாப்பு

கொவிட்-19 வைரஸின் பரவல்  குறித்து பதிவாகும் எண்ணிக்கையின் அடிப்படையில், சுகாதார அமைச்சு அடுத்த கட்ட தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொற்றை  எதிர்கொள்வது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து ஏற்கனவே பெற்றுக் கொண்ட  அனுபவங்களின் அடிப்படையிலும் உலக சுகாதர  அமைப்பின் ஆலோசனைகளுக்கு இணங்கியும் இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:கொவிட் புதிய திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புடன்  அடிக்கடி கலந்துரையாடி வருகிறோம்.

மருத்துவமனைகளில் பீ.சீ.ஆர்.சோதனைகளை நடத்தி வருகிறோம்.பொறுப்பற்ற முறையில் எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது.

மக்களின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படும். விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் அந்த முடிவையும் அரசாங்கம் எடுக்கும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd