web log free
June 19, 2026

எம்பி ஹர்ஷன சூரியப்பெரும இராஜினாமா

(கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

(கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும அவர்களின் கடிதத்திற்கு அமைய குறித்த பதவி விலகல் 2025 ஜூன் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு அமைய, 10வது பாராளுமன்றத்தில் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும ஆசனத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (5)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd