web log free
March 30, 2026

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும் - எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இருதரப்பினரும் அறிவித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd