web log free
June 17, 2026

அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்

 

அமைச்சரவைக் கூட்டம் வழமை போன்று இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

வழமையாக செவ்வாய்க்கிழமை காலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுகின்ற போதிலும் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தன.

எனினும, வழமை போன்று இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd