அமைச்சு பதவிகளில் இருந்து ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று (18) விசேட கலந்துரைாடலில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்காலத்தில் எடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அரசாங்கத்தில் அங்கம் வகித்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.
எனினும், ராஜினாமா செய்த சில அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.