முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேன்முறையீட்டை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுதூபி மற்றும் அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியிலிருந்து 33.9 மில்லியன் ரூபாயை தவறாக பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பின் அடிப்படைய எதிர்ப்பை நிராகரித்த மூன்று நீதியரசர்கள் குழாம், மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்தது.
அதற்கு எதிராக கோட்டாபய தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரிப்பதற்கே, ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம், நேற்று (17) நியமிக்கப்பட்டது.