web log free
September 26, 2023

கபீர் ஹாசிம் மற்றும் ஹலிம் ஆகியோர் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பு

கடந்த நாட்களில் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்திருந்த இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகியோரே மீண்டும் பதவிகளை பொறுப்பேற்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், முன்னர் தாம் வகித்த அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

பதவியேற்பு நிகழ்வானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.