web log free
June 14, 2026

கோட்டா நாடு திரும்பும் கால அவகாசம் நீடிப்பு

ன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 06 வார காலம் ஓய்வு தேவை என, அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை அவர் வௌிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழக்கு விசாரணைகளை விசேட மேல் நீதிமன்றம் ஜூலை மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd