கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி தனது 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘நைட்-ரோ 2025’ என்ற தலைப்பில் ஒரு பிரமாண்டமான கல்வி கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நவீன உலகிற்கு ஏற்ற எதிர்கால பிராஜைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த கண்காட்சி ஆகஸ்ட் 28 முதல் 30 வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
பாடசாலை மாணவர்களிடையே 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புத்தகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத கல்வியின் முக்கியத்துவத்தை இந்தக் கண்காட்சி வலியுறுத்துகிறது.
தொழில்நுட்ப மண்டலம் (ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, பொறியியல் திட்டங்கள், மெய்நிகர் யதார்த்தம்) இங்கு மையமாக உள்ளது. மேலும் கலை மற்றும் கலாச்சாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தகவல் தொடர்பு, விளையாட்டு மற்றும் வணிகம் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
100க்கும் மேற்பட்ட மாணவர்களால் நடத்தப்படும் அரங்குகள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் 100 அரங்குகள் கண்காட்சி முழுவதும் காட்சிப்படுத்தப்படும். பல்கலைக்கழகங்கள், தொழில்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் பங்கேற்புடன், இது இலங்கையில் மிகப்பெரிய கல்வி கண்காட்சிகளில் ஒன்றாக மாற உள்ளது.
மாணவர்கள் படைப்பு சிந்தனை, சிக்கல் தீர்க்கும் திறன், குழு தலைமைத்துவம் மற்றும் பயனுள்ள தகவல் தொடர்பு ஆகியவற்றைப் பயிற்சி செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். வேகமாக மாறிவரும் உலகில் வெற்றிபெறக்கூடிய எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராஜைகளை வளர்ப்பதை தேர்ஸ்டன் கல்லூரி நோக்கமாகக் கொண்டுள்ளது.