சுமார் 6 மாகாணங்களுக்கு காலநிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் மேற்குப் பகுதிகளில் மணித்தியாலத்துக்கு, 50- 60 கிலோமீற்றர் வேகத்தில் கடுங்காற்று வீசக் கூடுமென்று, காலநிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மத்திய நிலையம் இன்று காலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள குறித்த சிவப்பு எச்சரிக்கையானது, நாளை காலை 6 மணிவரை செல்லுப்படியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.